Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீண்ட இடைவெளியின் பின்னர் மாவீரர்தின நினைவேந்தல்கள்!

In இலங்கை
Published: 16:16 GMT, Nov 18, 2017 |
0 Comments
1414
icon_com
This post was written by : Ravivarman

நீண்ட இடைவெளியின் பின்னர் மாவீரர்களின் திருவுருவப்படங்கள் வைக்கப்பட்ட கொட்டகைகளில் கண்ணீர் மல்க மாவீரர்கள் நினைவு கூரப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் மாவீரர் வணக்க நிகழ்வும், பெற்றோர்கள் மதிப்பளிக்கும் நிகழ்வும் இன்று (சனிக்கிழமை) காலை பத்து மணியளவில் கைவேலிப்பகுதியில் அமைந்துள்ள ஜனநாயக போராளிகள் கட்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

ஜனநாயக போராளிகள் கட்சியினை சேர்ந்த டெல்சன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மாவீரர்களின் உறவுகளால் நினைவுப்பந்தலில் வைக்கப்பட்ட 200 மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெற்றோர்கள் மற்றும் உறவினர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு பொதுச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

நிகழ்வில் கருத்துரைகளை ஜனநாயக போராளிகள் கட்சியின் செயலாளர் இ.கிருபாகரன், புதுக்குடியிப்பு வணிகர் சங்க தலைவர் செ.செல்வச்சந்திரன், ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் க.துளசி ஆகியோர் நினைவுரைகளை நிகழ்த்தியுள்ளார்கள்.

இதில் மாவீரர்களின் பெற்றோர்களுக்கு, மாவீரர்களின் திருவுருவப்படங்கள், தென்னங்கன்றுகள் மற்றும் நினைவுப்பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ச்சியாக மாவீரர்களின் பெற்றோர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு ஜனநாய போராளிகள் கட்சியினால் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

Untitled

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg