Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு மூலோபாய பாதுகாப்புத் திட்டம் அவசியம்: பொன்சேகா

In இலங்கை
Updated: 16:58 GMT, Nov 18, 2017 | Published: 16:57 GMT, Nov 18, 2017 |
0 Comments
1119
This post was written by : Ravivarman
xx

நாட்டினது தேசிய பாதுகாப்புக்கு மூலோபாய பாதுகாப்பு திட்டம் ஒன்று வகுக்கப்படவேண்டியது அவசியம் என பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு, சட்டம், ஒழுங்கு மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுக்களுக்கான வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில் விவாததங்கள் நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெற்றன.

இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பிராந்தியப் பாதுகாப்பு போன்று இலங்கைக்கு வெளி மற்றும் உட்புறத்தில் ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து கவனம் செலுத்த வேண்டும். 30 வருட கால யுத்தம் நாட்டில் நிலவியது.

இதன் மூலம் பொருளாதாரத்திற்கும், மக்கள் வாழ்க்கைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. பாதுகாப்புத்துறையில் அனைவரும் இதற்காக மேற்கொண்ட அர்ப்பணிப்பை மறந்து விட முடியாது.

இதற்காக பெற்றோர், குடும்ப அங்கத்தவர்கள், உறவினர்கள் உள்ளிட்டோர் வழங்கிய ஒத்துழைப்பை கௌரவிக்க வேண்டும்.முன்னைய அரசாங்கம் இராணுவத்தை மதிக்கவில்லை. இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை சுமத்தி சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இராணுவ அதிகாரிகளுக்கு தமது அடையாளம் தொடர்பில் நம்பிக்கை இருக்கவில்லை. பாதுகாப்பு படையினர் தற்போது நிலை கொண்டுள்ள நிலைகளில் அவர்களைத் தொடர்ந்தும் அங்கு வைத்திருப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்மூலம் உண்மைக்கு புறம்பான பிரச்சாரங்களை மேற்கொண்டு பொது மக்களை தவறான வழியில் நடத்தக்கூடாது” என பீல்ட் மாஸ்டர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg