Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச இலக்கிய விழா!

In இலங்கை
Published: 17:23 GMT, Nov 18, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Ravivarman
DSC09863

மட்டக்களப்பு, மாவட்டத்தின் மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச இலக்கியவிழா நேற்று (வெள்ளிக்கிழமை) சிறப்பாக நடைபெற்றது.

கலாசார அலுவல்கள் திணைக்களமும் மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் பிரதேச கலாசார அதிகாரசபை என்பன இணைந்து இந்த நிகழ்வினை ஏற்பாடுசெய்திருந்தது.

மண்முனைப்பற்று பிரதேச செயலாளரும் பிரதேச கலாசார அதிகாரசபையின் தலைவருமான திருமதி சத்தியானந்தி நமசிவாயம் தலைமையில் மேற்படி நிகழ்வு நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் மொழித்துறை தலைவர் திருமதி ரூபிவலன்றினா பிரான்சிஸ் கலந்துகொண்டதுடன், மண்முனைப்பற்று பிரதேசசபையின் செயலாளர் ந.கிருஸ்ணபிள்ளை, மண்முனைப்பற்று கோட்டக்கல்வி அதிகாரி கே.நல்லதம்பி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது மண்முனைப்பற்று பிரதேசத்தில் உள்ள எழுத்தாளர்கள், மாணவர்களின் ஆக்கங்கள் தாங்கிய புதிய மழை என்னும் நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து தேசிய இலக்கிய போட்டிக்கு இணைவாக பிரதேச மட்டத்தில் நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் பரிசுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்வுகளும் நாட்டிய நாடகங்களும் நடைபெற்றது சிறப்பம்சமாகும்.

DSC09999 (1) DSC09953 DSC09946 DSC09932 DSC09891 DSC09864 DSC09785 DSC09781 DSC09736

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg