Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் பதவி நீக்கம்: பிரதமர் எச்சரிக்கை!

In இலங்கை
Published: 17:33 GMT, Nov 18, 2017 |
0 Comments
1158
icon_com
This post was written by : Ravivarman
2889564f52bdff1d07dc9c0b67d4eb57_XL

அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்காத அதிகாரிகள் பதவி நீக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மேலும் தற்போதைய அரசாங்கத்தின் நிர்வாகத்தில் அனைத்து கடன்களும் செலுத்தப்படும் என்றும் பிரதமர் நாடாளுமன்றத்தில் இன்று (சனிக்கிழமை) தெரிவித்தார்.

கோப் குழுவின் தலைவர் மற்றும் வரவு செலவுத்திட்டத் தலைவர் ஆகியோரைப் போன்று அனைத்துக் குழுக்களின் தலைவர்களும் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் திறைசேரியின் நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தின் கண்காணிப்புக்கு உட்படுத்தி பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்கப்படுவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் சமுர்த்தி நிவாரணத்தை அதிகரித்துள்ளதுடன், அரசாங்க ஊழியர்களின் சம்பளத்தை அதிகரித்தது போன்று எரிபொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg