Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் சூப்பர் லீக் நேற்றைய போட்டியிலும் இரசிகர்களுக்கு ஏமாற்றம்

In உதைப்பந்தாட்டம்
Updated: 04:57 GMT, Nov 19, 2017 | Published: 04:56 GMT, Nov 19, 2017 |
0 Comments
1140
icon_com
This post was written by : Elakkiya
hero-isl-m2-ne-v-jam_298179d2-cc8a-11e7-8cd0-7e09bc26593d

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரின் இரண்டாவது லீக் ஆட்டமும் கோல்கள் எவையும் பெறப்படாமல் சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

நோர்த் ஈஸ்ட் யுனைட்டட் மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகளுக்கு இடையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற தொடரின் இரண்டாவது லீக் போட்டி 0:0 என்ற அடிப்படையில் சமநிலையில் முடிவடைந்தது.

ஆரம்பம் முதலே மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் 3 ஆவது நிதிடத்தில் யுனைட்டட் அணிக்கு கோல் பெறும் வாய்ப்பு கிட்டியது. எனினும் அந்த வாய்ப்பு ஜாம்ஷெட்பூர் கோல் காப்பாளரால் அருமையாக தடுக்கப்பட்டது.

இருப்பினும் முயற்சியை கைவிடாத யுனைட்டட் அணி வீரர்கள் தொடர்ச்சியாக கோல்களை பெறுவதற்கு முயன்ற போதிலும் வாய்ப்புகள் யாவும் தடுக்கப்பட்டது. அதேபோன்றே ஜாம்ஷெட்பூர் அணி வீரர்களின் முயற்சிகளும் தோல்விகண்டது.

இரு அணிகளில் ஒன்றேனும் ஒரு கோலை போடாதா என்ற ஆவலுடன் இருக்கையின் நுனியில் அமர்ந்திருந்து பார்த்துக் கொண்டிருந்த இரசிகர்களுக்கு நேற்றைய போட்டியும் ஏமாற்றத்தை மாத்திரமே வழங்கியது.

நேற்று முன்தினம் நடைபெற்ற தொடரின் முதல் போட்டியும் கோல்கள் எவையும் பெறப்படாமல் சமநிலையில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg