Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வாள் வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடைய பதினொரு பேர் கைது: பொலிஸார் அதிரடி

In இலங்கை
Updated: 11:03 GMT, Nov 19, 2017 | Published: 05:03 GMT, Nov 19, 2017 |
0 Comments
1402
This post was written by : Anojkiyan

யாழ்ப்பாணத்தில் கடந்த சிலநாட்களுக்கு முன்னதாக இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்புடையதாக சந்தேகப்படும் பதினொரு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிசாரின் விஷேட சோதனை நடவடிக்கைகளின் போதே இவர்கள் நேற்றிரவு (சனிக்கிழமை) யாழ்ப்பாணம் நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

வாள் வெட்டு சம்பவங்கள் இடம்பெற்ற இடங்களை, ஆய்வு செய்த வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 14ஆம் திகதி, கோண்டாவில், அறுகால்மடம், நல்லூரடி மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில், இடம்பெற்ற வாள் வெட்டுச்சம்பவங்களில் 8 பேர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg