Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தியன் சூப்பர் லீக்: இன்றைய போட்டியில் சென்னை-கோவா அணிகள் மோதல்

In கிாிக்கட்
Updated: 05:17 GMT, Nov 19, 2017 | Published: 05:17 GMT, Nov 19, 2017 |
0 Comments
1091
icon_com
This post was written by : Elakkiya
5a10fdb5aabd4224a9000001

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்;து தொடரின் இன்றைய போட்டியில் சென்னையின் எவ்.சி மற்றும் கோவா அணிகள் மோதவுள்ளன. சென்னை நேரு அரங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5.30 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.

தொடரின் முதலிரு போட்டிகளும் கோல்கள் எதுவும் பெறப்படாமல் சமநிலையில் முடிவடைந்துள்ள நிலையில் இந்த போட்டியில் இரசிகர்கள் அதிக எதிர்பார்பை கொண்டுள்ளனர்.

இதுவரையான இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் மேற்படி இரு அணிகளும் ஆறுமுறை மோதியுள்ளன. அவற்றில் ஒவ்வொரு அணியும் தலா 3 போட்டிகளில் வெற்றிபெற்றன.

கடந்த ஆண்டு இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரில் அரையிறுதிக்குள் நுழையாத சென்னையின் எவ்.சி இந்த முறை இறுதிப் போட்டிவரை செல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றது. அதேவேளை தொடரை வெற்றியுடன் ஆரம்பிக்க வேண்டும் என்ற முனைப்பில் கோவா அணியும் களமிறங்குகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg