Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த யுத்தத்திற்கான வாய்ப்புக்களை உருவாக்கின்றனர்: சந்திரிக்கா

In இலங்கை
Updated: 05:44 GMT, Nov 19, 2017 | Published: 05:33 GMT, Nov 19, 2017 |
0 Comments
1861
icon_com
This post was written by : Anojkiyan
chandrika-kumaratunga

தமிழ் மக்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டிருந்தால் வடக்கில் யுத்தம் ஒன்று ஏற்பட்டு பாரிய பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்பட்டிருக்காது என குறிப்பிட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்க, இன்னும் இத்தகைய செயற்பாடுகளுக்கு வாய்ப்புக்களை உருவாக்கின்ற தரப்பினர் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கம்பஹாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பான பிரச்சினைக்கு அரசியல்வாதிகளால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருக்காது.

உயரிய பௌத்த தர்மத்தை பின்பற்றுகின்ற இலங்கை போன்ற ஒரு நாட்டில் 15 சதவீதமாக மாத்திரம் வாழும் சிறுபான்மை மக்களான தமிழ் மக்களின் உரிமைகளை வழங்காது இருந்து ஏன்? எனினும் பெரும்பான்மையான மக்கள் இத்தகைய ஒடுக்குமுறைகளை விரும்புவதில்லை” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg