Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மகாராணி எலிஸபெத் – இளவரசர் பிலிப் திருமண நாள்: புதிய புகைப்படம் வெளியீடு

In
Published: 05:30 GMT, Nov 19, 2017 |
0 Comments
1250
icon_com
This post was written by : Suganthini

பிரித்தானிய மகாராணி எலிஸபெத் மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப் ஆகியோரின் 70ஆவது திருமண வைபவ நாளைக் குறிக்கும் முகமாக, அவர்கள் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புதிய புகைப்படமொன்றை, பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ளது.

1966ஆம் ஆண்டு எலிஸபெத் மகாராணிக்கு இளவரசர் பிலிப்பினால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட ஆடையை அணிந்தவாறு அப்புகைப்படத்தில் மகாராணி காணப்படுகின்றார்.

மேற்படி ஆடையானது தங்க நிறத்தில் காணப்படுவதுடன், ஆடையில் வைரம் மற்றும் ரூபி கற்களைக் கொண்டு இழைக்கப்பட்டுள்ளன.

கடற்படை அதிகாரியாகக் கடமையாற்றிவந்த லெப்டினன்ட் பிலிப் மவுண்ட்பேட்டனுடன், 1947ஆம் ஆண்டு நொவம்பர் மாதம் 20ஆம் திகதி திருமண பந்தத்தில் எலிஸபெத் மகாராணி  இணைந்ததுடன், இவர்களின் திருமண வைபவம் உலகம் பூராகவும் கவனத்தையீர்த்தது.

இந்நிலையில், பிரித்தானிய மகாராணி எலிஸபெத் மற்றும் அவரது கணவரான இளவரசர் பிலிப் ஆகியோர் தமது குடும்பத்துடன், 70ஆவது வருட திருமண வைபவ நாளை கொண்டாடுவதற்குத் தயாராகியுள்ளனர்.

uk
toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg