Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சூதாட்டத்தில் ஈடுபட்ட 18 பேர் கைது!

In இலங்கை
Updated: 11:07 GMT, Nov 19, 2017 | Published: 10:57 GMT, Nov 19, 2017 |
0 Comments
1181
This post was written by : Puvanes

புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மதுரங்குளி பாலசோலை பிரதேசத்தில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பம் தொடர்பில் தெரியவருவதாவது,

நேற்றைய தினம் (சனிக்கிழமை) வீடொன்றில் பணத்திற்காக சூதாட்டம் இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து குறித்த வீட்டை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.

இதன் போது, வியாபாரிகள் மற்றும் அன்றாடம் கூலித்தொழில் செய்து வருபவர்களும் அடங்களாக 18 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம், மதுரங்குளி, அங்குணவில் மற்றும் தொடுவாய் போன்ற பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதோடு, சோதனை நடவடிக்கையின் போது சூதாட்டத்தில் ஈடுபட பயன்படுத்திய பணம் பொலிசாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை புத்தளம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள முந்தல் பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg