Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் ஸ்மார்ட் கடிகாரத்துக்கு தடை

In ஐரோப்பா
Published: 11:04 GMT, Nov 19, 2017 |
0 Comments
1197
icon_com
This post was written by : Suganthini
watch

ஜேர்மனியில் சிறுவர்கள் ஸ்மார்ட் கடிகாரங்களைப்  (smartwatches)   பயன்படுத்துவதை தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜேர்மன் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் முகவரகம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கமையவே, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஸ்மார்ட் கடிகாரங்கள், உளவு சாதனமாகக் பயன்படுத்தக்கூடிய நிலைமை காணப்படுவதாகவும் ஆகவே, சிறுவர்கள் ஸ்மாரட் கடிகாரங்களைப் பயன்படுத்துவதைத் தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் முகவரகம் தெரிவித்துள்ளது.

மேலும், ஸ்மார்ட் கடிகாரப் பயன்பாட்டிலிருந்து சிறுவர்களைத் தவிர்த்துக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு பெற்றோரிடம், தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் முகவரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg