Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சவால்களை எதிர்கொள்வது மிகவும் பிடிக்கும்: புஜாரா

In கிாிக்கட்
Updated: 12:16 GMT, Nov 19, 2017 | Published: 12:16 GMT, Nov 19, 2017 |
0 Comments
1239
icon_com
This post was written by : Elakkiya
IND-vs-NZ-1st-Test-Cheteshwar-Pujara-Century-at-Hyderabad-Test-2012

ஆடுகளத்தில் சவால்களை எதிர்கொள்வது தனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று என இந்திய அணியின் முன்னணி வீரர் புஜாரா தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணிக்காக நிலைத்து நின்று விளையாடி 52 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்த புஜாரா நிருபர்களுடனான சந்திப்பின்போது மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “ஆடுகளம் சவாலாக அமைந்தது. இது போன்ற ஆடுகளத்தில் விளையாடுவது மிகவும் பிடிக்கும். இத்தகைய ஆடுகளங்கள் தான் ஆட்ட நுணுக்கங்களுக்கும் மன உறுதிக்கும் பொருத்தமானது. கடினமான ஆடுகளங்களில் என்னை நானே ஊக்கப்படுத்தி நிலைத்து நின்று விளையாட முயற்சிக்கின்றேன்” என்று தெரிவித்துள்ளார்.

இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 172 ஓட்டங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg