Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் அடுத்த புலனாய்வு ஊடகவியல் அமர்வு!

In இலங்கை
Published: 16:23 GMT, Nov 19, 2017 |
0 Comments
1248
icon_com
This post was written by : Ravivarman

2019ஆம் ஆண்டு ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் அடுத்த புலனாய்வு ஊடகவியல் அமர்வுகள் இடம்பெறவுள்ளதாக எமது விசேட செய்தியாளர் அருண் ஆரோக்கியநாதன் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்காவின் ஜொகன்னஸ்பேர்க் நகரில் இடம்பெற்ற 10ஆவது புலனாய்வு ஊடகவியல் மாநாட்டிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் குறித்த இந்த மாநாட்டிலே 130 நாடுகளைச் சேர்ந்த 1200 இற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டிருந்ததாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

அத்துடன் இம்மாநாட்டில்,நேர்காணல், புலனாய்வு ஊடகவியல், ஊடகத்துறையில் புள்ளிவிபரங்களில் அடிப்படையில் செயற்படுதல் போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg