Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காலநிலை மாற்றம்!

In இலங்கை
Published: 16:42 GMT, Nov 19, 2017 |
0 Comments
1075
icon_com
This post was written by : Ravivarman
images

நாட்டில் இன்று முதல் எதிர் வரும் சில தினங்களுக்கு பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வடக்கு மற்றும் கிழக்கு கரையோர பிரதேசங்களில் பல இடங்களில் மழை பெய்யக்கூடும். இரத்தினபுரி மாவட்டத்தில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பெய்யக்கூடும்.

மேற்கு சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமுடனான காலநிலை நிலவுவதுடன், இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடும் காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் இடி மின்னல் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்றும் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg