Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கல்வி அமைச்சரின் நடவடிக்கை தொடர்பாக நாளை தீர்மானம்: ஆளுநர்

In இலங்கை
Updated: 17:09 GMT, Nov 19, 2017 | Published: 17:09 GMT, Nov 19, 2017 |
0 Comments
1249
icon_com
This post was written by : Ravivarman
_91199397_3a5a7016

வட.மாகாண கல்வி அமைச்சரின் நடவடிக்கை தொடர்பில் நாளை (20) சட்ட மா அதிபர் காரியாலயத்தில் ஆலோசனை பெறவுள்ளதாக வட.மாகாண ஆளுநர் ரெஜினோல் குரே தெரிவித்துள்ளார்.

இது குறித்து வட.மாகாண ஆளுநரிடம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”வவுனியாவிலுள்ள பாடசாலை ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது வட மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தேசியக் கொடியை ஏற்றுவதனைப் புறக்கணித்தமை அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கை எனப் பல தரப்புக்களிலும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

இவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கேட்டு வருகின்றனர். இது குறித்து சட்ட மா அதிபர் செயலகத்தில் ஆலோசனை பெறவே திங்கட்கிழமை தான் செல்லவுள்ளேன்” என வட மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg