Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜனாதிபதியுடன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அமைச்சர் சந்திப்பு!

In இலங்கை
Published: 17:20 GMT, Nov 19, 2017 |
0 Comments
1118
icon_com
This post was written by : Ravivarman
65fbe0971f6cbed481d2b4bfa80ca37c_XL

ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஷெய்க் அப்துல்லா பின் ஷெயித் அல் நயன் (H.H. Sheikh Abdullah bin Zayed Al Nahyan) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.

இந்தச் சந்திப்பு ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் இடம்பெற்றது.

இலங்கைக்கும் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கும் இடையிலான தொடர்புகளில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள துரித வளர்ச்சி குறித்து ஜனாதிபதி இதன்போது மகிழ்ச்சி தெரிவித்தார்.

இரு நாட்டு உறவுகளுக்கும் முக்கிய சக்தியாக விளங்கும் ஐக்கிய அரபு தேசத்தில் வசிக்கும் 125,000 இலங்கைத் தொழிலாளர்களின் பங்களிப்பு தமது பொருளாதாரத்தில் முக்கிய பங்கினை வகிப்பதாக ஐக்கிய அரபு இராச்சியத்தின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் இதன்போது தெரிவித்ததையடுத்து, அவர்களது பங்களிப்பு எமது நாட்டிற்கும் அந்நிய செலாவணியைப் பெற்றுக்கொடுத்து நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றதென ஜனாதிபதி தெரிவித்தார்.

இரு நாடுகளிற்கு இடையிலான பொருளாதார உறவுகளையும் முதலீடுகளையும் மேம்படுத்துதல் தொடர்பாகவும் சுற்றாடல், ஹோட்டல் வர்த்தகத்துறை, நிதி நிறுவனங்கள் முதலியவற்றிற்கான வாய்ப்புகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg