Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பளத்துக்கு வேலை செய்வதைவிட சமுதாயத்திற்கு வேலை செய்வதே சிறப்பானதாகும்: மணிவண்ணன்

In இலங்கை
Published: 17:47 GMT, Nov 19, 2017 |
0 Comments
1213
icon_com
This post was written by : Ravivarman
manivannan

சம்பளத்துக்கு வேலை செய்வதைவிட சமுதாயத்திற்கு வேலை செய்வது சிறப்பானதாகும். நாம் செய்யும் வேலையை திருப்திகரமாகவும், மனச்சாட்சிக்கு நேர்மையாகவும் செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளர் என்.மணிவண்ணன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாநகரசபையின் சுகாதார தொழிலாளர்களுக்கு ‘முறையான திண்மக்கழிவகற்றல்’ தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) மட்டக்களப்பு மாநகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”அரச கடமையை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும். எங்களுக்கு ஒப்படைக்கும் வேலைகளை சரியாக செய்யவேண்டும். எமது வேலையைச் சிறப்பாகச் செய்தாலும் குறை காண்பதே மனித இயல்பாகும்.

அதற்கு நாங்கள் ஒருபோதும் பயப்பட வேண்டாம். உங்களின் ஒத்துழைப்புக்கள் மட்டக்களப்பு மாநகரசபைக்கு மிகவும் முக்கியமானது.

கழிவுகளை பாடசாலைகளிலும், வீடுகளிலும், அரச திணைக்களங்களிலும் சரியாக முகாமை செய்தால் குப்பைப்பிரச்சனை தோன்றாது. வீடுவீடாக முறையாக சேகரிக்கப்படவேண்டும்.

வீடுகளில் மூன்று வகையாக தரம்பிரித்து தங்களின் குப்பைகளை பொதுமக்கள் வைத்திருக்க வேண்டும். குறிப்பாக உக்கக்கூடியது, உக்க முடியாதது, இலத்திரனியல் கழிவுகள் என்று தரம்பிரித்து வைக்க வேண்டும்.

வெற்றுக்காணிகளிலோ, பொது இடங்களிலோ, வடிகான்களிலோ, வீதிகளிலோ குப்பைகளையும், கழிவுகளையும் வீசக்கூடாது. அவ்வாறு வீசுபவர்களை சரியாக இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தண்டப்பணம் அறவிடப்படும் என மாநகரசபை ஆணையாளர் என்.மணிவண்ணன் மேலும் தெரிவித்தார்.

MC (5) MC (2) MC (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg