Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

த.தே.கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை இக்கட்டுக்குள் தள்ளும் எண்ணம் இல்லை: விக்னேஸ்வரன்

In இலங்கை
Published: 17:52 GMT, Nov 19, 2017 |
0 Comments
2606
icon_com
This post was written by : Ravivarman

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்தை இக்கட்டுக்குள் தள்ளும் எண்ணம் தனக்குக் கிடையாது என வட.மகாண முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

வாரம் ஒரு ஊடகவியலாளரின் கேள்விக்கு பதிலளிக்கும் பகுதியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஊடகவியலாளர் ஒருவர் கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு தாங்கள் முட்டுக்கட்டையா? என வினவியிருந்தார்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில் இன்று விக்னேஸ்வரன் அறிக்கை ஒன்றை விடுத்து மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார்.

வடக்கு – கிழக்கு இணைப்பைக் கைவிட்டால் கிழக்கு மாகாணத் தமிழர்களுக்குத் துரோகம் இழைத்தவர்கள் என கருதப்படுவோம் எனவும் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேரினவாதம் தொடர்ந்து தலைகாட்டாமல் இருக்க வட கிழக்கு இணைப்பு அத்தியாவசியமானது என தெரிவித்துள்ள முதலமைச்சர், கிழக்கை முழுமையாகத் தம்வசப்படுத்தத் சிங்கள தலைவர்கள் தற்போது முயற்சிப்பாதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் சுயநிர்ணயம், சமஷ்டி ஆகியன ஒரு மக்கள் கூட்டம் தம்மைத் தாமே ஆள வழிவகுக்கும் என வலியுறுத்தியுள்ள அவர், அதுவே பெரும்பான்மையினத்தின் பேரினவாதத்தை முறியடிக்கக் கூடியது எனவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg