Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விளையாட்டு உலகையே கிரிக்கெட் கெடுத்து விட்டது!

In கிாிக்கட்
Updated: 05:31 GMT, Nov 20, 2017 | Published: 05:31 GMT, Nov 20, 2017 |
0 Comments
2108
This post was written by : Puvanes

கிரிக்கெட் விளையாட்டானது இந்தியாவின் விளையாட்டு உலகையே கெடுத்து விட்டதாக ஜமேக்காவின் பிரபல தடகளவீரர் லின்போர்ட் கிறிஸ்டி தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றிக்கு நேர்காணல் ஒன்றினை வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவைப் பொறுத்தவரையிலும் கிரிக்கெட் போட்டிகளுக்கே அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகின்றது. இதனால் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவின் பங்களிப்பு குறைவாகவே காணப்படுகின்றது என அவர் கூறியுள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் சிறப்பாக நடத்தப்படுகின்றார்கள் ஆனால் ஓட்டப்பந்தய வீரர்களுக்கு அந்த சிறப்பு இல்லை எனக் குறிப்பிட்ட கிறிஸ்டி, எனினும் தற்போதுள்ள இந்த நிலைமை கூடிய விரைவிலேயே மாற்றத்தினைச் சந்திக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

உலகின் வேகமான வீரரான உசைன் போல்ட்க்கு சமமான திறமை வாய்ந்தவராக மதிக்கப்படும் கிறிஸ்டி ஒலிம்பிக் உட்பட பல்வேறு மட்ட சம்பியன்ஷிப் போட்டிகளிலும் தங்கம் வென்றவர் என்பது சுட்டிக்காட்டப்படத்தக்கது.

மேலும், தற்போது கிறிஸ்டி இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் செயற்திட்டங்களில் ஈடுபட்டு வருகின்றார் என்பதோடு அதற்காக அவர் இந்தியாவின் கிராமம் கிராமமாக சென்று வரவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg