Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியில் கூட்டணி அரசாங்கம்: பேச்சுவார்த்தை தோல்வி

In ஐரோப்பா
Published: 10:15 GMT, Nov 20, 2017 |
0 Comments
1234
icon_com
This post was written by : Suganthini

ஜேர்மனியில் மூன்று கட்சிகளைக் கொண்ட கூட்டணி அரசாங்கத்தை உருவாக்க நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.

கூட்டணி அரசாங்கத்தை உருவாக்கும் நோக்கில் சி.டி.யூஃசி.எஸ்.யூ மற்றும் கிறீன்ஸ், எப்.டி.பி ஆகிய கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இருப்பினும், எப்.டி.பி கட்சி இந்தப் பேச்சுவார்த்தையிலிருந்து விலகிக்கொண்டது.

இந்தப் பேச்சுவார்த்தையில், எப்.டி.பி கட்சி மீண்டும் இணையவில்லையாயின், ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கல் சிறுபான்மைக் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க வேண்டியேற்படும். அல்லாவிடின், புதிய தேர்தல் நடத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற பொதுத் தேர்தலில், அங்கேலா மெர்கலின் கட்சி வெற்றி பெற்றது. இப்பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளமையால், அங்கேலா மெர்கல் பாரிய சவாலை எதிர்கொண்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg