Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமஷ்டித் தன்மை கொண்ட அரசியல் யாப்பு வேண்டுமென்பதில் கூட்டமைப்பு தீவிரம்!

In இலங்கை
Published: 10:39 GMT, Nov 20, 2017 |
0 Comments
1143
icon_com
This post was written by : Anojkiyan

மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு மீண்டும் பறித்துக்கொள்ளாத வகையில் சமஷ்டித் தன்மை கொண்ட ஒரு அரசியல் யாப்பை உருவாக்க வேண்டும் என்பதில், எமது தலைமைகள் செயற்படுகின்றன என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று பிரதேச விளையாட்டுக் கழகங்கள் மற்றும் பொது அமைப்புகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில், “இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றிய பேச்சுவார்த்தைகளின் போதும் அரசியல் யாப்பு வரைகின்ற விடயங்களில் கடந்த காலங்களில் தமிழ் தலைமைகள் எடுத்த முயற்சிகள் போதாது என்ற குற்றச்சாட்டுகளை உள்நாடுகளிலும் வெளிநாடுகளிலும் அரசு கூறிவந்துள்ளது. தமிழ் மக்கள் வாழுகின்ற பிரதேசத்தில் தங்களது விடயங்களை தாங்களே கையாளக் கூடியதாகவும் தமது அதிகாரங்களைப் பெற்றுக்கொள்ளக் கூடியதாகவும் புதிய அரசியல் யாப்பு இருக்க வேண்டும்.

மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசு மீண்டும் பறித்துக்கொள்ளாத வகையில் சமஷ்டித் தன்மை கொண்ட ஒரு அரசியல் யாப்பு உருவாக்க வேண்டும் என்பதில் எமது தலைமைகள் செயற்படுகின்றன. தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பது மட்டுமின்றி இடைக்கால அறிக்கையில் பங்குதாரர்களாகவும் செயற்படுகிறது.

எமது மக்கள் யுத்த சூழ்நிலையில் வாழ்ந்து சலிப்படைந்துவிட்டார்கள் நாங்கள் ஒரு சரியான ஜனநாயக திசையில் கொண்டு செல்ல வேண்டிய நிலையில் உள்ளோம். அனுபவம் மிக்க எமது தலைவர் சம்பந்தன் இந்த விடயத்தில் மிகவும் கவனமாக கடந்த கால படிப்பினைகளை கொண்டு செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார். இந்த விடயத்தில் அரசு மீண்டும் எங்களை ஏமாற்றிவிட முடியாது. எமது மக்களுக்குப் பொருத்தமில்லாத விடயங்களைத் திணிப்பார்களாகவிருந்தால் அதை ஏற்றுக்கொள்வதற்கு நாங்கள் தயாரில்லை” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg