Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நடிகர் வடிவேலு மீது இயக்குநர் ஷங்கர் புகார்!

In சினிமா
Published: 10:40 GMT, Nov 20, 2017 |
0 Comments
1330
icon_com
This post was written by : Ravivarman
imsaiarasan1jpg

வடிவேலு படப்பிடிப்பிற்கு வராததால் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக இயக்குநர் சங்கர் அளித்த புகாரின் பேரில் நடிகர் வடிவேலுவிடம் தயாரிப்பாளர் சங்கம் விளக்கம் கேட்டுள்ளது.

இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகின்றனர்.

இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் மீண்டும் ஹீரோவாக நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிக்க உள்ளதுடன், இந்தப் படத்தை இயக்குநர் சங்கர் தயாரிக்கிறார்.

இந்நிலையில், படப்பிடிப்பின் போது வடிவேலு தனக்குப் பிடித்த ஆடை வடிவமைப்பாளரை பரிந்துரை செய்ததாகவும், ஆனால், படக்குழுவினர் அதற்கு மறுப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், நடிகர் வடிவேலு சில தினங்களாக படப்பிடிப்பிற்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg