Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மஹிந்தானந்தவுக்கு பிணை வழங்கியவர்களுக்கு நீதிமன்றம் அறிவித்தல்

In இலங்கை
Updated: 11:04 GMT, Nov 20, 2017 | Published: 11:00 GMT, Nov 20, 2017 |
0 Comments
1085
icon_com
This post was written by : Arul Jesu
mahindanandabribarycase

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் நீதிமன்றில் ஆஜராகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக அவருக்கு பிணை வழங்கியவர்களை நாளை நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு, அறிவித்தல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

மஹிந்தானந்த அனுத்கமகே அமைச்சராக பதவிவகித்த போது, சட்டவிரோதமாக பெறப்பட்டதாக கூறப்படும், 27 மில்லியன் ரூபா பணத்தை பயன்படுத்தி, கொழும்பு – கிங்சி வீதியில் வீடொன்றைக் கொள்வனவு செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இது தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் நாடாளுமன்ற அமர்வில் பங்குகொண்டுள்ளதன் காரணமாக அவருக்கு நீதிமன்றத்தில் ஆஜராக பிறிதொரு தினத்தை வழங்குமாறு கோரினார்.

இதனை அடுத்து பிணை வழங்கியவர்கள் ஆஜராகியுள்ளனரா? என நீதிபதி வினவியதற்கு பிரதிவாதி தரப்பில் ஆஜரான சட்டத்தரணி இல்லை என பதிலளித்துள்ளார்.

எனவே, பிரதிவாதி ஆஜராகவில்லையாயின், அவருக்கு பிணை வழங்கியவர்கள் அவசியம் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்க வேண்டும் என தெரிவித்த நீதிபதி வழக்கை நாடாளுமன்ற கூட்டம் நடைபெறாத தினங்களான டிசம்பர் 13 மற்றும் 15ம் திகதிகளுக்கு ஒத்திவைத்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg