Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடி வரலாற்றை மாற்றியமைக்க முயல்கிறார் : சோனியாகாந்தி கண்டனம்!

In இந்தியா
Published: 11:45 GMT, Nov 20, 2017 |
0 Comments
1079
icon_com
This post was written by : Kemasiya
sonija

பிரதமர் மோடி வரலாற்றை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக, காங்கிரஸின் தலைவர் சோனியாகாந்தி தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற,  காங்கிரஸின் மத்திய செயற்குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே,  அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்த அவர்,

இந்தியாவிற்காக நேருவும்,  இந்திராகாந்தியும் செய்த சேவைகள்,  தியாகங்கள், புறக்கணிக்கப்படுகிறது. இதன் மூலம்,  வரலாற்றை மாற்றியமைக்கும் முயற்சியில்,  பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார்.

அத்துடன் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்று,  பதில் கூறும் அளவிற்கு பிரதமரிடம் தைரியமில்லை. அதனால் தான், வழக்கமாக இடம்பெறும் குளிர்கால கூட்டத்தொடரை முடக்குவதற்கு, பா.ஜ.க. சதி தீட்டுகிறது என,  தெரிவித்துள்ளார்.

மேலும் காங்கிரஸில் உள்ள சில அம்சங்களினால் தான் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது என்றும்,  தமது கட்சிக்கே அதிக வாக்கு வங்கிகள் உள்ளன எனவும்,  அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg