Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விட்டுக்கொடுப்பும் ஒற்றுமையுமே வெற்றிக்கு வழிவகுக்கும்: சி.வி

In இலங்கை
Published: 11:40 GMT, Nov 20, 2017 |
0 Comments
1185
icon_com
This post was written by : Varshini

நோய்த்தடுப்பு விடயங்களில் மிகவும் கரிசனையுடனும் ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாகவும் செயற்படுவது அவசியமென தெரிவித்துள்ள வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன், மக்கள் யாவரும் ஒற்றுமையுடனும் விட்டுக்கொடுப்புடனும் செயற்பட்டால் யாழ்ப்பாண நகரத்தை சுத்தப்படுத்தலாமென குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பெருமளவில் குவிந்து கிடக்கும் திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கென விசேட திண்மக் கழிவு அகற்றல் செயற்திட்டம் ஒன்று, குருநகர பகுதியில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பிக்கப்பட்டது. இச்செயற்றிட்டம் எதிர்வரும் 24ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே முதலமைச்சர் மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

பொதுமக்கள் மத்தியில் ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவர வேண்டும். பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு வருகின்ற போதே திண்மக் கழிவு முகாமைத்துவத்தை திறம்பட நடத்த முடியுமென முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

பொதுமக்கள் விடும் சிறுசிறு தவறுகளே நுளம்புப் பெருக்கங்களுக்கு பிரதான காரணங்களாக அமைந்துவிடுகின்றதென சுட்டிக்காட்டிய முதலமைச்சர், நுளம்புகள் பரவும் இடங்களை அவதானித்து செயற்பட்டால் அதனை கட்டுக்குள் கொண்டுவரலாமென தெரிவித்தார். அத்தோடு, அயலவர்களுக்கும் இவ்வாறான விடயங்களை கூறி நல்வழிப்படுத்தினால், நோயின்றி வாழலாமென முதலமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg