Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆண்களின் அழகை இன்னும் அழகாக்க சில குறிப்புக்கள்!

In
Published: 12:20 GMT, Nov 20, 2017 |
0 Comments
1339
icon_com
This post was written by : Surenth
Smart-Boy

ஆண்களுக்கு சிவப்பாக, அழகாக இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். சொல்லப்போனால் பெண்களை விட ஆண்கள் தான் தங்களது முகத்திற்கு அதிக பாரமரிப்பை செய்ய வேண்டும். ஏனென்றால் அவர்கள் தான் மிக அதிக நேரம் வெயிலில் அலைகிறார்கள். அவர்களுக்கு தான் அதிகமாக வெயிலில் அலைவதால், முகம் கருமையாகின்றது.

ஆண்கள் தங்களது முகஅழகை பற்றி கவலைப்படாமல் இருந்தார்கள். ஆனால் இப்போது எல்லாம் பெண்களை விட ஆண்கள் தான் தங்களது அழகு விஷயத்தில் அதிகமாக கவனம் செலுத்துகின்றனர். இந்த பகுதியில் ஆண்களின் தோற்றத்தை மேம்படுத்தும் சில அழகுக்குறிப்புகளை தருகின்றோம்

சந்தனம்
சுத்தமான சந்தனத்தை பாதாம் எண்ணெய்யில் குழைத்து முகத்தில் பூசி, இந்த கலவை காய்ந்ததும் முகத்தை கழுவலாம் . சந்தனம் உடலுக்கு குளிர்ச்சியை தருகிறது. இதனால் உங்களது முகம் பொலிவடையும்.

தக்காளி
தக்காளியை நன்றாக பிசைந்து அதனோடு 4 – 5 துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிக்கொள்ளலாம்.

பால்

முகத்தை கழுவியபிறகு சிறிதளவு பாலை உள்ளங்கையில் எடுத்து முகத்தில் பூசவும். இவ்வாறு தொடர்ந்து 2 – 3 வாரங்கள் வரை செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவடைந்திருப்பது கண்கூடாக தெரியும்.

இளநீர்

சிறிதளவு இளநீரை முகம், கழுத்து பகுதி, கைகளில் பூசிவந்தால் சரும நிறம் மாறும். இதனை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலனை சீக்கிரமாக காணமுடியும்.

சீரகம் மற்றும் முள்ளங்கி

சீரகம் மற்றும் முள்ளங்கியை ஆகியவற்றை தனித்தனியே தண்ணீரில் கொதிக்கவைத்து, அந்த தண்ணீரில் முகத்தை கழுவினால் மாசுகள் அகற்றப்பட்டு முகம் பிரகாசமாக தோன்றும்.

புதினா மற்றும் எலுமிச்சை

புதினா மற்றும் எலுமிச்சை சாற்றைக் கலந்து முகத்தில் தடவலாம். இவை முகத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கும். இவை முகத்தின் நிறத்தை கூட்டுவதையும் கண்கூடாக காணலாம்.

முட்டை

முட்டையின் வெள்ளை கருவை வாரம் இருமுறை முகத்தில் பூசிவந்தால் சரும நிறம் சிகப்பாக மாறுவதோடு மிருதுவாகவும் மாறும்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg