Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ்.சிறுமி துஸ்பிரயோக வழக்கு: குற்றவாளிக்கு கடூழிய சிறைத் தண்டனை!

In இலங்கை
Updated: 12:53 GMT, Nov 20, 2017 | Published: 12:53 GMT, Nov 20, 2017 |
0 Comments
1153
This post was written by : Ravivarman

யாழ்ப்பாணம் மணல்காட்டு பிரதேசத்தில் சிறுமியொருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக இனங்காணப்பட்டவரிற்கு, 15 ஆண்டுகால கடூழிய சிறைத் தண்டனை விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இன்று (திங்கட்கிழமை) தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 2012ஆம் ஆண்டு ஜீலை மாதம் மணல்காட்டு பிரதேசத்தை சேர்ந்த பதினாறு வயதினை விட குறைந்த பெண் பிள்ளையை துஸ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 47 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையான விக்டர் அருந்தவராஜா என்பவர் எதிரியாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்தார்.

யாழ்.மேல் நீதிமன்றில் இடம்பெற்ற குறித்த பாலியல் துஸ்பிரயோக வழக்கில் அரச சட்டவாதியான நாகரட்ணம் நிஷாந், குறித்த எதிரிக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டதுடன், குறித்த நபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுமி கரப்பமாகியதில் நான்கு வயதில் பெண் குழந்தை ஒன்றும் தற்போது உள்ளது.

எனவே ஒரு சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து அப் பெண்ணின் வாழ்க்கையை வீணடித்து கர்ப்பவதியாக்கிய குறித்த எதிரிக்கு சட்டப் புத்தகத்தில் உள்ள அதியுச்ச தண்டனை வழங்க வேண்டும் என மன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து குறித்த நபருக்கு 15 ஆண்டுகால கடுழிய சிறைத் தண்டனையும், 30 ஆயிரம் ரூபா தண்டப்பணமும், கட்டத்தவறின் 18 மாத கடூழிய சிறை அனுபவிக்க வேண்டுமெனத் தீர்ப்பளிக்கப்பட்டது.

அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 6 இலட்சம் ரூபா நஷ்டஈடும், கட்டத்தவறின் 18 மாத கடூழிய சிறைத் தண்டனையும் விதித்து யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg