Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பாகிஸ்தானில் வாகன விபத்து: 20 பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 12:46 GMT, Nov 20, 2017 |
0 Comments
1061
icon_com
This post was written by : Suganthini
accident-logo11

பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கைர்புர் (Khairpur) பகுதியில் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மினிபஸ் ஒன்றும் டிரக் வண்டி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதாகவும் கடுமையான பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து சம்பவித்துள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், படுகாயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்புகள்  அதிகரிக்கலாமெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg