Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சர்வேஸ்வரன் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நடவடிக்கை : ரெஜினோல்ட் குரே

In இலங்கை
Published: 15:28 GMT, Nov 20, 2017 |
0 Comments
1247
icon_com
This post was written by : Surenth

வடக்கு மாகாண கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமையவே தீர்மானங்கள் எடுக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இது குறித்து கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் உள்ள சிங்கள பாடசாலை ஒன்றில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொள்ள சென்ற வடக்கு மாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியை ஏற்ற மறுத்த விடயம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும், இலங்கையின் அரசியல் யாப்புக்கு அமையவே மாகாண அமைச்சர்கள் தங்கள் கடமைகளை செய்ய வேண்டும் எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இந்த நிலையிலேயே, தாம் சட்டமா அதிபருடன் இது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் விரைவில், நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg