Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு!

In இலங்கை
Published: 15:50 GMT, Nov 20, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Ravivarman
allazee prize giving 20.11 (50)

மன்னார்-அல்-அஸ்ஹர் தேசிய பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று (திங்கட்கிழமை) மாலை 3 மணியளவில் பாடசாலையின் அதிபர் எம்.வை.மாஹிர் தலைமையில் மன்னார் நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.

2015 ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளுக்கான பரிசளிப்பு நிகழ்வாக இடம்பெற்றதுடன்,குறித்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, சிறப்பு விருந்தினராக மன்னார் வலயக்கல்விப்பணிப்பாளர் திருமதி எஸ்.சுகந்தி செபஸ்தியன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இதன் போது பாடசாலை மட்டத்திலும், தேசிய மட்டத்திலும் கடந்த 2015 ஆம் மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் சாதனை படைத்த மாணவர்கள் சான்றிதழ்கள் மற்றும் வெற்றிக் கேடயங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

allazee prize giving 20.11 (52) allazee prize giving 20.11 (45) allazee prize giving 20.11 (44) allazee prize giving 20.11 (38) allazee prize giving 20.11 (37) allazee prize giving 20.11 (33) allazee prize giving 20.11 (11) allazee prize giving 20.11 (1)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg