Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

யாழ். கோப்பாய் பகுதியில் வாள்களுடன் இருவர் கைது!

In இலங்கை
Published: 16:44 GMT, Nov 20, 2017 |
0 Comments
2357
icon_com
This post was written by : Surenth
stf

யாழ். கோப்பாய், இராசபாதை பகுதியில் விஷேட அதிரடிப்படையினரின் ரோந்து நடவடிக்கையின் போது, வாள்களுடன் இருவர் இன்று (திங்கட்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியில், முச்சக்கர வண்டி ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக வாள்களை எடுத்துச் சென்றவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் அச்சுவேலி, பத்தமேனி பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 22 வயதையுடைவர்கள் எனவும் அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டியும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இராணுவ தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல்வேறு வாள்வெட்டு சம்பவங்கள் தொடர்பில் இதுவரை சந்தேகத்தின் பேரில் 40இற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg