Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தலையிட முடியாது: ஜனாதிபதி செயலகம்

In இலங்கை
Published: 17:45 GMT, Nov 20, 2017 |
0 Comments
1238
icon_com
This post was written by : Surenth
anuradapuram prison

அனுராதபுர சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்க முடியாது என ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதி செயலகம், யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சிறைக்கைதிகளின் விசாரணை நடவடிக்கை நீதிமன்றத்துடன் தொடர்புடையதால் இந்த விடயத்தில் தங்களால் தலையீடு செய்ய முடியாது எனவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனுமதி கோரி, யாழ்.பல்கலைக்கழக ஒன்றியம் கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தது.

இந்தக் கடிதத்திற்கு பதிலளிக்கும் வகையில், ஜனாதிபதி செயலகத்தால் குறித்த விடயங்களை சுட்டிக்காட்டி, பதில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG-2760

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg