Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டேவிட் வோர்னருக்கு காயம்: அவுஸ்ரேலிய அணி நிர்வாகம் குழப்பத்தில்

In கிாிக்கட்
Updated: 08:17 GMT, Nov 21, 2017 | Published: 08:17 GMT, Nov 21, 2017 |
0 Comments
1380
This post was written by : Elakkiya

ஆஷஸ் தொடர் ஆரம்பமாவதற்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் அவுஸ்ரேலிய அணியின் துணைத் தலைவர் டேவிட் வோர்னர் காயமடைந்துள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) பயிற்சியில் ஈடுபட்டிருந்த நிலையில் டேவிட் வோர்னருக்கு திடீரென கழுத்தில் வலி ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக பயிற்சியிலிருந்து அவர் வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் நிருபர்களிடம் கருத்து தெரிவித்த வோர்னர், “பயிற்சியின் போது பிடியெடுப்புக்கு முயற்சித்தேன். கழுத்தில் பெரும் வலியை உணர்ந்தேன். கழுத்துப்பகுதி கடினமாக உள்ளது. இதற்கு முன்னர் இதுபோன்று நான் உணரவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 24 அல்லது 48 மணிநேரத்திற்குள் மீள திரும்ப முடியும் என்று நம்புவதாகவும் அதற்கான நடவடிக்கைகயை மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஷஸ் தொடருக்கான அவுஸ்ரேலிய அணியின் முக்கிய வீரராக கருதப்படும் வோர்னருக்கு இவ்வாறு உபாதை ஏற்பட்டுள்ளமையானது அணி நிர்வாகத்தை குழப்பமடையச் செய்துள்ளது.

இங்கிலாந்து மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறும் ஆஷஸ் தொடர் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பித்து 2018 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி வரை அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg