Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராகுல் காந்தி மீண்டும் குஜராத்தில் தேர்தல் பிரசாரம்!

In இந்தியா
Updated: 09:44 GMT, Nov 21, 2017 | Published: 09:14 GMT, Nov 21, 2017 |
0 Comments
1117
icon_com
This post was written by : Ravivarman
201711211246120861_Rahul-Gandhi-has-been-campaigning-in-Gujarat-since-24th_SECVPF

குஜராத் மாநில சட்டசபைத் தேர்தலையொட்டி 5ஆவது கட்டமாக ராகுல் காந்தி எதிர்வரும் 24ஆம் திகதி முதல் பிரசாரம் தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில் அடுத்த மாதம் 9 மற்றும் 14ஆம் திகதிகளில் இரு கட்டமாக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளதுடன், இரு கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்தும் உள்ளனர்.

முதற்கட்ட தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் இன்றுடன் முடிவடையும் நிலையில், பிரதமர் மோடி விரைவில் குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 5 பொதுக் கூட்டங்களில் உரையாற்ற இருக்கின்றார்.

இந்நிலையிலேயே காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியும் 5-வது கட்டமாக எதிர்வரும் 24ஆம் திகதி குஜராத்தில் பிரசாரத்தை தொடங்க உள்ளதுடன், புகழ்பெற்ற சோமநாத் ஆலயத்திற்கும் செல்ல திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg