Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அணியின் வெற்றிக்கு பங்களிப்பதே எனது நோக்கம்: விராட் கோஹ்லி

In கிாிக்கட்
Updated: 10:14 GMT, Nov 21, 2017 | Published: 10:13 GMT, Nov 21, 2017 |
0 Comments
1356
This post was written by : Elakkiya

சதங்களை குவிப்பதை விட அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதே தனது நோக்கம் என இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்துள்ள நிலையில் போட்டியின் பின்னரான செய்தியாளர் சந்திப்பில் விராட் கோஹ்லி மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன்போது, இந்திய அணியின் பந்து வீச்சாளர்களுக்கு பாராட்டு தெரிவித்த விராட் கோஹ்லி, “இலங்கை அணி பந்து வீச்சு நன்றாக இருந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் அதிக முன்னிலை பெறாவிட்டால் எங்களால் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று நம்பினோம். 2ஆவது இன்னிங்சில் இலங்கை அணியின் துடுப்பாட்டம் சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், புவனேஸ்வர் குமார் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், கடுமையான உழைப்புக்கு தகுந்த பலனை அவர் பெற்றுவருவதாகவும் அணியில் புவனேஸ்வர் குமார் முக்கியமான ஒரு வீரர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg