Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஸ்ரீராகவேந்திரா பிருந்தாவனத்தில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்!

In
Updated: 10:59 GMT, Nov 21, 2017 | Published: 10:59 GMT, Nov 21, 2017 |
0 Comments
1353
This post was written by : Ravivarman

ஆந்திரா மாநிலம், கர்ணூல் மாவட்டத்தில் உள்ள புண்ணிய ஸ்தலமான மந்திராலயத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை)  ரஜினிகாந்த் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.

அதன் பின்னர், அங்குள்ள துங்கபத்ரா நதியில் நீராடியதைத் தொடர்ந்து அங்குள்ள கிராம தேவதையான மஞ்சாலம்மா கோவிலுக்குச் சென்று அங்கும் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டார்.

இதையடுத்து, அவர் மடாதிபதி சுபுதீந்திராவை சந்தித்து ஆசி பெற்றதுடன், 15 நிமிடங்களுக்கு மேலாக ஆன்மீகம் குறித்த கலந்துரையாடலிலும் ஈடுபட்டிருந்தார்.

ரஜினிகாந்தின் வருகை குறித்து யாருக்கும் தெரிவிக்காமல் இருந்த நிலையிலும், அவரைக் காண அங்கு இரசிகர்களின் கூட்டம் அலைமோதியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.

rajini2 rajini IMG-20171121-WA0113

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg