Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜம்மு காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!

In இந்தியா
Published: 12:15 GMT, Nov 21, 2017 |
0 Comments
1121
icon_com
This post was written by : Ravivarman
VBK-HANDWARA

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் குப்வாரா மாவட்டத்தில் இடம்பெற்ற தேடுதல் நடவடிக்கையில், லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிவாதிகளை இராணுவம் சுட்டுக்கொன்றது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் உள்ள ஹந்த்வாரா பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக இராணுவத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்தே மேற்படி தேடுதல் நடவடிக்கையில் தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறுவதாகவும், சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களாக இருக்கலாம் என நம்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தினைத் தொடர்ந்து குமார் மொகல்லா, மகம், அனன்வான் மற்றும் ஹாச்பர்க் ஆகிய பகுதிகளில் சிறப்பு நடவடிக்கை குழு, ஜம்மு காஷ்மீர் பொலிஸ் மற்றும் மத்திய ரிசர்வ் பொலிஸ ஆகியோர் இணைந்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg