Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

டெனிஸ்வரனின் ‘ரிட்’ மனுவை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு!

In இலங்கை
Published: 12:53 GMT, Nov 21, 2017 |
0 Comments
1296
icon_com
This post was written by : Varshini
CV AND DENISH

பதவி நீக்கம் தொடர்பில் கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்த, வடக்கு மாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரனின் ரிட் மனுவை தொடர்ந்து விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கெதிராக டெனீஸ்வரனால் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் தன்னை பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து, கடந்த ஓகஸ்ட் மாதம் 30ஆம் திகதி டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்திருந்தார். எனினும், குறித்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையிலேயே இன்று இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் பிரதிவாதிகளாக முதலமைச்சர் விக்னேஸ்வரன், வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே, மாகாண அமைச்சர்களான ஜி.குணசீலன், அனந்தி சசிதரன், கே.சர்வேஸ்வரன், கே.சிவனேசன் மற்றும் முன்னாள் அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg