Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மின்னேரியா விபத்தில் மூவர் படுகாயம்: ஒருவர் கவலைக்கிடம்

In இலங்கை
Published: 13:16 GMT, Nov 21, 2017 |
0 Comments
1184
icon_com
This post was written by : Varshini

பொலனறுவை மின்னேரியா பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில், மூவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுஓயா பாலத்தின் மீது நேற்றிரவு (திங்கட்கிழமை) இவ்விபத்து நேர்ந்துள்ளது. ஹபரணயிலிருந்து வந்த மோட்டார் சைக்கிளும் மின்னேரியாவிலிருந்து வந்த லொறி மற்றும் கார் மோதிக்கொண்டதில் இவ்விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் மோட்டார் சைக்கிள் தலைகீழாக புரண்டு தீப்பற்றி எரிந்துள்ளது. லொறி ஆற்றிற்குள் கவிழ்ந்ததாகவும், கார் பாலத்தின் மதிலில் மோதியதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.

விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற இருவரும் லொறியில் பயணித்த ஒருவரும் படுகாயமடைந்து ஹபரண வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். ஒருவர் ஆபத்தான நிலையில் தம்புள்ள வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மின்னேரியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg