Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மனுஸ்தீவு முகாம் குடியேற்றவாசிகள் தத்தளிப்பு

In
Published: 13:18 GMT, Nov 21, 2017 |
0 Comments
1127
icon_com
This post was written by : Suganthini
nanus

மனுஸ்தீவு தடுப்பு முகாம் மூடப்பட்டுள்ளபோதும், அங்கிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்து அம்முகாமில் தொடர்ந்து தங்கியிருக்கும் குடியேற்றவாசிகள்  சுகவீனமடைந்துள்ளதுடன், மோசமான சுகாதார நிலைமையையும்  எதிர்நோக்கியுள்ளதாக, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதி மனுஸ்தீவிலுள்ள தடுப்பு முகாமை,  அவுஸ்ரேலிய அரசாங்கம் மூடியதுடன், இம்முகாமில் மின்விநியோகத்தையும் துண்டித்தது.

முகாமை மூடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள குடியேற்றவாசிகள் சுமார் 600 பேர், முகாமிலிருந்து வெளியேற மறுப்புத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அம்முகாமில் தங்கியிருக்கும் இவர்கள் உணவு மற்றும் தண்ணீருக்கான தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.

குடியேற்றவாசிகளுக்கான அடிப்படை வசதிகள்  மறுக்கப்பட்டுள்ளதால், தற்போது இவர்கள் தங்கியிருக்கும் முகாம் அசுத்தமாகக் காணப்படுவதுடன்,  நெருப்புக்காய்ச்சல், கொலரா உள்ளிட்ட நோய்களாலும் குடியேற்றவாசிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு அவசரமாக சிகிச்சை அளிக்கப்பட வேண்டியுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இவர்களின் நிலைமை மிகவும் மோசமாகக் காணப்படுவதாகவும், அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தற்போது இவர்கள் மிகவும் மோசமான நிலைமைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், இவர்களுக்கு உடனடியாக உதவி தேவைப்படுவதாகவும், அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg