Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்களை கொன்றது தவறில்லையா? – புதிய தேசியக்கொடியே ஈழத்தின் கோரிக்கை!

In இலங்கை
Published: 13:27 GMT, Nov 21, 2017 |
0 Comments
1871
icon_com
This post was written by : Puvanes

தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறில்லை. ஆனால் தேசியக் கொடியினை ஏற்ற மறுத்தது தவறா? புதிய அரசியலமைப்பு, புதிய தேசியக்கொடியினை அமைப்பதே தமிழ் மக்களின் கோரிக்கை என வடமாகாண சபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

அண்மையில் வவுனியா பரகும்பா சிங்கள வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் தேசிய கொடியை ஏற்றுவதற்கு வடமாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் மறுப்பு தெரிவித்திருந்தார்.

குறித்த விடயம் பல்வேறுபட்ட சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிலையில், இது தொடர்பில் இன்றைய தினம் யாழில். நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே சிவாஜிலிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

வடமாகாண கல்வி மற்றும் பண்பாட்டு அலுவல்கள் அமைச்சர் க.சர்வேஸ்வரன் தேசிய கொடியினை ஏற்ற மறுப்புத் தெரிவித்த விடயம் தென்னிலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த நிகழ்வின்போது முன்னாள் கல்வி அமைச்சர் மற்றும் ஏனைய உறுப்பினர்கள் தேசிய கொடியினை வேறு யாராவது ஏற்றுமாறு தெரிவித்துள்ளனர்.

இந்தநிலையில், அங்கிருந்த ஆசிரியர் ஒருவர் இதை சர்ச்சையான விடயமாக மாற்றியுள்ளார். ஒன்றுமில்லாத விடயத்தை பெரிய விடயமாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் சித்தரித்துவருகின்றனர்.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் பிரித்தானிய ஆட்சியின் கீழ் இருந்தவர்கள் இலங்கை நாடாளுமன்றத்தில் இருந்தவாறே பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக குரல் கொடுத்தார்கள்.

இவ்வாறான நிலையிலேயே அரசியலமைப்பினையும், தேசியக் கொடியினையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. தேசியக் கொடியினை அவமதிக்கவோ அல்லது கீழே போட்டு மிதிக்கவோ இல்லை அவர் தேசிய கொடியினை ஏற்ற மறுத்து மட்டுமே உள்ளார்.

அதனை சர்ச்சையாகமாற்றி சட்ட நடவடிக்கை எடுப்பதாக கூறி வருகின்றார்கள். அவ்வாறான சட்ட நடவடிக்கை என்ன என்பதனைப் பார்க்கலாம்.

அமெரிக்காவில் 50 மாநில அரசுகள் இருக்கின்ற இடத்தில் கூட ஆர்ப்பாட்டக்காரர்கள் தேசிய கொடியினை எரிப்பதற்கு கூட உரிமை உள்ளதென அந்த நாடு ஏற்றுக்கொண்டுள்ளது.

தமிழ் மக்களை கொன்று குவித்தது தவறாக தெரியவில்லை. தேசிய கொடியினை ஏற்ற மறுத்தது தான் தவறான விடயம். புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு புதிய தேசிய கொடி அமைக்கப்பட வேண்டும். அது வரையிலும் இந்த சர்ச்சைகள் நீடிக்கும்.

10 இலட்சம் பேரின் குடியுரிமையை பறித்தீர்கள். தனிச் சிங்கள சட்டம் கொண்டு வந்தீர்கள். சிங்கள குடியேற்றங்களைச் உருவாக்கினீர்கள். அரசியலமைப்பின் மூலம் தொடர்ந்தும் எமது உரிமைகளைப் பறித்தீர்கள். எவ்வாறாயினும் ஆயுதப் போராட்டத்தின் தொடர்ச்சியாகவே இவற்றினைப் பார்க்க வேண்டும்.

சிங்கள மக்கள் இந்த விடயத்தினை பிரச்சினையாக மாற்றுவார்கள் எனின், இந்தப்பிரச்சினை இன்னும் பெரிய பிரச்சினையாக மாறும். புதிய அரசியலமைப்பு, புதிய தேசியக்கொடியே ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கை எனவும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg