Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நகரசபை பிரதேசசபையாக மாற்றம்! – அசௌகரியத்தில் மக்கள்

In இலங்கை
Published: 14:06 GMT, Nov 21, 2017 |
0 Comments
1269
icon_com
This post was written by : Puvanes

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மூன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் தம்மை தலவாக்கலை நகரசபையிலிருந்து நுவரெலியா பிரதேசசபையான கொட்டகலை பிரதேசசபைக்கு மாற்றியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டமானது மாலை 4.00 மணியளவில் குமாரகம பகுதியில் அமைந்துள்ள ஹொலிரூட் கிராம சேவகர் அலுவலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் புதிதாக மேலதிகமாக மூன்று பிரதேச சபைகள் அதிகரிப்பட்டு அண்மையில் வரத்தமானியும் வெளியிடப்பட்டது

இந்த வர்த்தமானிக்கமைய குமாரகம, தெவிசிரிபுர, ரத்னிலகல ஆகிய கிராமங்கள் தலவாக்கலை நகரசபையிலிருந்து மாற்றம் பெற்று கொட்டகலையில் அமையவுள்ள பிரதேசசபைக்கு மாற்றம் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே கவனயீர்ப்பு போராட்டமானது முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தங்களை மாற்றம் செய்வதனால் 20 கிலோமீற்றர் தூரம் சென்று தமது சேவைகளை செய்து கொள்ள வேண்டியுள்ளதாகவும், இதனால் தமக்கு நகரசபை ஊடாக கிடைக்கின்ற சலுகைகள் இல்லாது போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இதனால் தமக்குள்ள பெறுமதிமிக்க அசையா சொத்துக்களின் பெறுமதி குறைவதாகவும், இதற்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் எதிர்காலத்தில் தாங்கள் வழக்கு தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

protest002 protest003

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg