Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஈராக்கில் குண்டு வெடிப்பு: சுமார் 23 பேர் உயிரிழப்பு

In உலகம்
Published: 05:12 GMT, Nov 22, 2017 |
0 Comments
1153
icon_com
This post was written by : Suganthini

வட ஈராக்கின் ருஷ் குர்மடு (Tuz Khurmatu) நகரில் இடம்பெற்றுள்ள கார்க் குண்டு வெடிப்பில் சிக்கி சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ருஷ் குர்மடுவிலுள்ள மரக்கறிச் சந்தையொன்றுக்கு அருகில்; நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்தக் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இந்தக் குண்டு வெடிப்பில் சிக்கி இதுவரையில் சுமார் 23 பேர் உயிரிழந்துள்ளதுடன், 60 பேர் படுகாயமடைந்துள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், படுகாயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமெனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்தக் குண்டு வெடிப்புக்கு இதுவரையில் எந்தவொரு அமைப்பும் பொறுப்பேற்க முன்வரவில்லையெனவும் இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளதாகவும்   பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg