Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பதவி விலகுவதாகத் தெரிவித்த லெபனான் பிரதமர் ஹரிரி, தாயகம் திரும்பினார்

In உலகம்
Published: 05:37 GMT, Nov 22, 2017 |
0 Comments
1250
icon_com
This post was written by : Suganthini
lebanon

லெபனான் பிரதமர் ஸாட் அல் ஹரிரி தனது பதவியைவிட்டு விலகுவதாக அறிவித்திருந்த நிலையில் நேற்று தாயகம் திரும்பியுள்ளார். சவுதி அரேபியாவிலில் இருந்தபோதே அவர் தனது பதவியை ராஜினாமாச் செய்வதாக அறிவித்திருந்தார்.

லெபனானில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கில் அவர் நாடு திரும்பியுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சவுதியில் தங்கியிருந்த லெபனான் பிரதமர் ஹரிரி, அந்நாட்டு தொலைக்காட்சிச் சேவையொன்றில் தோன்றி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தனது பிரதமர் பதவியை ராஜினாமாச் செய்வதாக எவரும் எதிர்பாராத வகையில் கடந்த 4ஆம் திகதி அறிவித்திருந்தார்.

இருப்பினும், இவரது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ள விரும்பாத லெபனான் ஜனாதிபதி மைக்கேல் அவுன், பிறிதொரு நாட்டிலிருந்து அறிவிக்கும் ராஜினாமாத் தொடர்பாக தீர்மானிக்க முடியாதெனக் கூறியிருந்ததுடன், உடனடியாக நாடு திரும்புமாறும் பிரதமர் ஹரிரிக்கு வலியுறுத்தியிருந்தார்.

இதனையடுத்து, லெபனானின் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்ளும் வகையில் தான் நாடு திரும்புவதாக பிரதமர் ஹரிரி அறிவித்திருந்த நிலையில், லெபனானுக்குத் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg