Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாதியர்கள் பணிப்புறக்கணிப்பு- வைத்தியசாலைகளில் நோயாளர்கள் அவதி

In இலங்கை
Published: 06:31 GMT, Nov 22, 2017 |
0 Comments
1220
icon_com
This post was written by : Elakkiya

வடக்கு, கிழக்கு, மலையகம் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தாதியர்கள் மற்றும் மருத்துவ சேவையாளர்கள் இன்று (புதன்கிழமை) பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தாதியர்கள் சேவையில் நிலவும் ஊதிய முரண்பாடுகள், பதவி உயர்வு, மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படாமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தாதியர்கள் உள்ளிட்ட மருத்துவ சேவையாளர்களின் ஒன்றிணைந்த தொழிற்சங்கத்தினால் மேற்படி பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஊதிய பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டால் போராட்டத்தை கைவிட தயார் என தொழிற்சங்கம் அறிவித்துள்ளது.

தாதியர்கள், மருந்தாளர்கள், எக்ஸ்ரே கதிரியக்க உத்தியோகத்தர்கள், பொதுச்சுகாதார பிரிவினர் உட்பட்ட அனைத்து சுகாதார சேவையினரும் பணிப்புக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதால் நோயாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

வைத்தியசாலைகளில் வெளிநோயாளர் பிரிவுகள் முற்றாக இயங்கவில்லை என்று கூறப்படுகின்றது. சிகிச்சைக்காக வைத்தியசாலை செல்லும் நோயாளர்கள் வைத்தியர்களால் பரிசோதிக்கப்படுகின்ற போதிலும் மருந்துகளை பெற்றுக்கொள்ளாமல் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது.

S5090028 S5090030 S5090039 DSC09772

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg