Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேசிய கொடி விவகாரம்: மீண்டும் சர்ச்சையில் சர்வேஸ்வரன்!

In இலங்கை
Updated: 10:43 GMT, Nov 22, 2017 | Published: 06:14 GMT, Nov 22, 2017 |
0 Comments
1333
icon_com
This post was written by : Varshini
sarveswaran 7499

வடக்கு மாகாண கல்வியமைச்சர் க.சர்வேஸ்வரன் கலந்துகொண்டிருந்த மற்றுமொரு நிகழ்வில், தேசியக் கொடி உள்ளிட்ட எந்தவொரு கொடியும் ஏற்றப்படாமை மீண்டும் சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது.

யாழ்ப்பாணம் உடுப்பிட்டி அமெரிக்க மிசன் கல்லூரியின் அதிபர் விடுதிக்கான புதிய கட்டடம் நேற்று (செவ்வாய்க்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

இதில் சர்வேஸ்வரனும் கலந்துகொண்டிருந்த நிலையில், பாடசாலை கொடியோ, மாகாண சபை கொடியோ, தேசியக் கொடியோ ஏற்றப்படவில்லை.

வவுனியாவில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வடக்கு கல்வியமைச்சர் சர்வேஸ்வரன் தேசிய கொடியை ஏற்றாமல் சென்றமை தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பலைகளை தோற்றுவித்துள்ள நிலையில், இந்நிகழ்வில் எந்தவொரு கொடியும் ஏற்றப்படவில்லை.

எனினும், பாடசாலை நிகழ்வுகளில் இவ்வாறான கொடிகள் ஏற்றப்படுவதில்லையென பாடசாலை அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், கொடி ஏற்றப்படாமை தொடர்பில் அதிருப்தி வெளியிட்ட மாகாண சபை உறுப்பினர் சிவக்கொழுந்து அகிலதாஸ், நீண்ட போராட்டத்தின் பின்னர் கிடைக்கப்பெற்ற மாகாணசபை கொடிகள், வடக்கின் பல பாடசாலைகளில் இன்னும் காணப்படாமை வேதனையான விடயமெனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg