Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியர் மீதான வன்முறை இன அழிப்புக்கான அடையாளம் – அமெரிக்கா

In
Published: 06:27 GMT, Nov 22, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Suganthini

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுப்பட்டுவரும் வன்முறைச் சம்பவங்கள், இன அழிப்புக்கான அடையாளமென, அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ஜெஃப் மெர்க்லி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராஹினி மாநிலத்தின் நிலைமையை கண்காணிக்கும் நோக்கில் ஜெஃப் மெர்க்லி தலைமையிலான அமெரிக்கக் காங்கிரஸ் குழுவினர், இந்த வாரம் அங்கு சென்றுள்ளனர். இதனையடுத்து, மியன்மாரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘மியன்மாரின் ராஹினி மாநிலத்தைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்களில் பலர், வன்முறைச் சம்பவங்களால் பாதிக்கப்பட்ட நிலையில் அவல வாழ்க்கைக்கு முகங்கொடுத்துள்ளனர். தங்களது குடும்ப உறுப்பினர்கள் தங்களது கண்முன்னால் கொலை செய்யப்பட்டும், பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவங்களைக் கண்ட பலர் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்’ என்றார்.

மேலும், ‘வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் பங்களாதேஷுக்கு தப்பிச்செல்வதற்கு வழிவகுத்துள்ளதுடன், இதுவரையில் சுமார் 6 இலட்சம் பேர் பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளனர். அத்துடன், ராஹினி மாநிலத்தில் சுமார் 300 கிராமங்கள் ராணுவ நடவடிக்கையால் அழிக்கப்பட்டுள்ளன’ எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘இந்த மக்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களை நோக்கும்போது, இன அழிப்புக்கான அடையாளத்தையே வெளிக்காட்டுகின்றது. எனவே, இந்த மக்கள் படும் துயரத்தைக் கண்டு நாமும் கவலையடைந்துள்ளோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg