Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வுக் கலந்துரையாடல்

In இலங்கை
Updated: 07:04 GMT, Nov 22, 2017 | Published: 07:02 GMT, Nov 22, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Elakkiya
DSC_5752

நீரிழிவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பில் நீரிழிவு தொடர்பான விழிப்புணர்வூட்டலும் கலந்துரையாடலும் இடம்பெற்றள்ளது. கிழக்கு பல்கலைக்கழக சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞான பீடத்தின் ஏற்பாட்டில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இந்நிகழ்வு இடம்பெற்றது.

மட்டக்களப்பு சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானபீட கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழிப்பூட்டல் நிகழ்வில் பொதுமக்களுக்கான தெளிவூட்டல்களை வைத்திய நிபுணர்கள் வழங்கியிருந்தனர்.

‘நீரிழிவும் சமூகமும்’ எனும் தலைப்பில், குடும்பநல வைத்திய நிபுணர் வைத்தியர் கே. அருளானந்தமும், ‘கர்ப்பமும் சர்க்கரையும்’ எனும் தலைப்பில் மகப்பேற்றியல் மற்றும் பெண்ணியல் வைத்திய நிபுணர் எம். திருக்குமாரும், ‘உணவே ஒளடதமாக’ எனும் தலைப்பில் சௌக்கிய விஞ்ஞான பீட வைத்திய நிபுணர் வைத்தியர் கே.ரீ. சுந்தரேசனும் ‘நீரிழிவும் ஜதீகமும் ஜயம் தெளிதலும்’ எனும் தலைப்பில் விசேட பொது வைத்திய நிபுணர் எம். உமாகாந்தும் விளக்கமளித்தனர்.

அத்துடன், சுகாதார ஆரோக்கியத்துறை தொடர்பான சந்தேகங்களுக்கும் தெளிவூட்டல் வழங்கப்பட்டதுடன் நீரிழிவு நோயின் தாக்கம், நோயை கட்டுபடுத்துவதற்கான வழிமுறைகள், உணவு பழக்கவழக்கங்கள் போன்ற விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.

நிகழ்வில், வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், சௌக்கிய பராமரிப்பு விஞ்ஞானங்கள் பீட வைத்தியத்துறை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

DSC_5751 DSC_5757

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg