Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறையில் அடைத்தாலும் ராஜாவை போல வாழுவேன்!: லாலு பிரசாத்

In இந்தியா
Published: 07:06 GMT, Nov 22, 2017 |
0 Comments
1162
icon_com
This post was written by : Puvanes
lalu001

தன்னை சிறையில் அடைத்து விடும் சதித்திட்டத்தினை மத்திய அரசு தீட்டி வருவதாக ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சித் தலைவர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.

பேட்னாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற நிர்வாகக் குழு கூட்டம் ஒன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், எதிர்வரும் தேர்தல் காலங்களில் நான் வெளியே இருப்பதை மத்திய அரசில் உள்ளவர்கள் விரும்பவில்லை, அதனால் என்னை சிறையில் அடைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து விட்டனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எப்போது வேண்டுமானாலும் நான் சிறையில் அடைக்கப்படலாம் எனக் குறிப்பிட்டுள்ள அவர், சிறையில் இருந்தாலும் நான் ராஜவாழ்வினையே வாழ்வேன் எனவும் கூறியுள்ளார்.

எவ்வாறாயினும் என்னை சிறையில் அடைத்துவிட்டால் கட்சியை சீர்குலைத்து விடலாம் எனத் திட்டம் தீட்டுகின்றார்கள். எனினும் அது ஒரு போதும் நடக்காது எனவும் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும், பிரதமர் மோடி மக்களை ஏமாற்றி வருகின்றார் எனக் குறிப்பிட்ட லாலு, கருப்பு பணத்தினை மீட்டு ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் வைப்பிலிடுவதாக கூறினாரே அது என்ன நடந்தது என்ற கேள்வியையும் முன்வைத்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg