Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிறப்பாக நடைபெற்ற மன்னார் நகர பிரதேச கலாசார விழா

In இலங்கை
Published: 07:28 GMT, Nov 22, 2017 |
0 Comments
1123
icon_com
This post was written by : Elakkiya

வட.மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் மன்னார் நகர பிரதேச கலாசார விழா சிறப்பாக இடம்பெற்றுள்ளது.  மன்னார் பிரதேச செயலகமும், மன்னார் கலாசார பேரவையும் இணைந்து நடத்திய இந்நிகழ்வு நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை மன்-புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

மன்னார் பிரதேச செயலாளர் எம்.பரமதாசன் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய பிரதம விருந்தினராகவும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல், முசலி பிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் பா.அபிராமி, மன்னார் வலயக்கல்விப் பணிப்பாளர் திருமதி சுதந்தி செபஸ்தியன், மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் றெஜினோல்ட் ஆகியோர் விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில், ‘மன்னல்’ சிறப்பு மலர் வெளியீடும் சிறப்பு பட்டிமன்றமும் இடம்பெற்றதுடன் விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

kalachara vila 11.21 (6) kalachara vila 11.21 (24) kalachara vila 11.21 (14)

kalachara vila 11.21 (16)kalachara vila 11.21 (29)

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg